தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிற்றுந்து போக்குவரத்துச் சேவை விரைவில் தொடக்கம்

மெட்ரோ பயணிகள் வசதிக்காக முதற்கட்டமாக 12 சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சிறிய பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்படும்
சிறிய பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்படும்

By

Published : Oct 19, 2021, 2:01 PM IST

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து முக்கியப் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் முதற்கட்டமாக 12 சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை போக்குவரத்துக் கழகத்தில் 210 சிற்றுந்துகள் உள்ளன. அதில் தற்போது 66 சிற்றுந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. போதிய பயணிகள் வரவேற்பின்மை, மெட்ரோ, புறநகர் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் சிற்றுந்து சேவை குறைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மெட்ரோ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களையும், பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையில் 12 சிற்றுந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நகரின் முக்கியப் பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்ட 13 சிற்றுந்துப் போக்குவரத்துச் சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துக் கழக வருவாய் உயர்த்துவதுடன், மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடே...எங்களை நிராகரித்துவிடாதீர்கள்; தமிழில் வருத்தம் தெரிவித்த சொமெட்டோ!

ABOUT THE AUTHOR

...view details