தமிழ்நாடு

tamil nadu

இதுவரை 111 தேர்தல் வழக்குகள்: சென்னை காவல் துறை

By

Published : Mar 17, 2021, 3:45 PM IST

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1795 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

Chennai 111 Election cases, Chennai 1795 Gun handed over to police due to election, சென்னையில் 111 தேர்தல் வழக்குகள், சென்னையில் 1795 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு, சென்னை, chennai police, chennai, chennai latest, சென்னை காவல்துறை
111-cases-filed-and-1795-gun-handed-over-to-chennai-police-due-to-election

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் ஆற்ஆம் தேதி நடைபெற உள்ளதால் கடந்த 28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், கண்காணிப்பு குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் காவல் துறை கண்காணித்து வருகின்றனர். தேர்தலின்போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குற்ற பதிவேடு ரவுடிகளை கண்டறிந்து காவல் துறையினர் சிறையிலும் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி முதல் இன்று (மார்ச் 17) காலைவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 111 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உரிமம் பெற்ற 1795 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1685 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நடைமுறையில் உள்ள திட்டங்களைக்கூட அறியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடும் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details