தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல்: 10,12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதியில் மாற்றம்!

உள்ளாட்சித் தேர்தல் பணி காரணமாக 10,12 ஆம் வகுப்பு திருப்புதல் ஆங்கிலப் பாடத் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்
திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்

By

Published : Feb 8, 2022, 1:10 PM IST

சென்னை:உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 10ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதனால் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”2021-2022ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே நாளை முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10.2.2022 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அன்று நடைபெறவுள்ள பத்தாம்வகுப்பு, 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.2.2022 அன்று நடைபெறும்.

எனவே, பத்தாம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத் தேதி மாற்றம் குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவைச் சீண்ட வேண்டாம்! - சீனா, பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details