வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி
முதலமைச்சர் ஸ்டாலின் 100 நாள்களை பூர்த்தி செய்கின்ற இந்நாளில் சொல்வதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்கின்ற அரசாக செயல்படுகிறது. வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் நன்றி.
கொங்கு ஈஸ்வரன்
இந்த அரசின் செயல்பாடு 100 நாள்களை மட்டுமே பூர்த்தி செய்த அரசு போல இல்லாமல் பல ஆண்டுகளாக ஆட்சி செய்வது போல இருக்கிறது, மனதார வாழ்த்துகள்.
ஜவாஹிருல்லா: மனிதநேய மக்கள் கட்சி
கரோனாவை தமிழ்நாட்டை விட்டு விரட்ட முடியும் என நம்பிக்கை கொடுத்திருக்கிறது இந்த 100 நாள் ஆட்சி . பல காலம் தொடர வாழ்த்துகள்.
சதன் திருமலை குமார்- மதிமுக
மக்களின் கண்ணீரை துடைக்க ஏகப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டம் போற்றுதலுக்குறியது.
தளி ராமச்சந்திரன் - கம்யூனிஸ்ட்
மக்களின் வாழ்விற்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இந்த 100 நாள் உள்ளது. டாப் 10 முதலமைச்சர்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார். மக்கள் நலன் தொடர வாழ்த்துகிறேன்.
நாகை மாலி - கம்யூனிஸ்ட்
கீழ்வேளூரில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டி, முதலமைச்சரை பாராட்டி வாழ்த்துகிறேன்.
சிந்தனை செல்வன் - விசிக
நெகிழ்ந்து மகிழ்ந்து இருக்கிறோம், விசிக சார்பில் நெஞ்சார பாராட்டுகிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சனநாயக சமத்துவ பணிக்காக நெகிழ்ந்து இருக்கிறோம். மாநில கல்வி கொள்கை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் உள்வாங்கி இருக்கிறது இந்த அரசு.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் சமத்துவம் காக்கும் நாயகனாக முதலமைச்சர் பயணம் தொடர வாழ்த்துகிறோம். பனை மரத்தின் சிறப்புகளையும், பாதுகாப்பையும் வேளாண் அறிக்கையில் அறிவித்திருப்பது மகிழ்வை தருகிறது.
இந்த அறிவிப்புகள் நாம் கியூபாவில் இருக்கிறோம் என்கிற உணர்வை தருகிறது.
செல்வப்பெருந்தகை - காங்கிரஸ்
முதலமைச்சரே நீங்கள் உயர உயர இந்த நாடும் உயரும். அருமையான ஆட்சியை தரும் முதலமைச்சரைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டிற்கு விடியல் வந்திருக்கிறது என மக்களிடம் நம்பிக்கை பிறந்திருக்கிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு நீதி வழங்கிய சோழனாக விளங்குகிறார் முதலமைச்சர்.
துரைமுருகன்- அவை முன்னவர்
வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை என்பது மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறது. நம் பாட்டனும், முப்பாட்டனும் நினைத்து கூட பார்க்க முடியாத அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை தொடங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளார் முதலமைச்சர். பெரியார் நினைத்தார், கருணாநிதி தீர்மானம் போட்டார், ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
இதையும் படிங்க:மதுரை ஆதீனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்