சென்னை:வழக்கறிஞர் எம். சீனுவாசன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இந்தியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் புலானய்வுக் கட்டுரை வெளியிட்டது தொடர்பாக இருந்தது.
நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம். சீனுவாசன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், 'இஸ்ரேல் இடம் இருந்து பெகாசஸ் மென் உளவுப்பொருள் வாங்கி, இந்தியாவில் மத்திய அரசு அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள், அலுவலர்களை உளவு பார்த்தாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, கடந்தாண்டு ஜன.28ஆம் தேதி புலனாய்வுக் கட்டுரை ஒன்று பிரசுரித்து இருந்தது.
இச்செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை. இதனால் இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது என்றும், முறையாக விசாரிக்காமல் அவசரகோலத்தில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.