மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் இன்று மநீம மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மக்கள் நீதி மய்யக் கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு முதல்கட்டமாக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மநீம கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள்!
சென்னை: மக்கள் நீதி மய்யக் கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் செரிஃப், "திமுக அதிமுகவிற்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். இங்குள்ள இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும், இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவளிப்பார்கள். அடுத்த முதலமைச்சர் கமல் ஹாசன் தான். மநீமவின் சின்னமான டார்ச் லைட் சின்னத்திலேயே நாங்களும் போட்டியிடவுள்ளோம்" எனத் தெரிவித்தார். அப்போது மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் குமரவேல் உடனிருந்தார்.
இதையும் படிங்க:அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கார்த்திக்!