தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிப்பு - exam dates for 10th and 12th

10ஆம், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று (பிப். 25) மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Public exam dates for 10th and 12th
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

By

Published : Feb 25, 2022, 2:26 PM IST

Updated : Feb 25, 2022, 3:09 PM IST

சென்னை:சாந்தோமில் உள்ள அடைக்கல அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ”முதல் திருப்புதல் தேர்வில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தேர்வுகள் பாதுகாப்பான முறையில் நடத்தப்படும்.

சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது படி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்த கால அட்டவணை இன்று (பிப். 25) மாலை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதனை ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் சரியாக கண்காணிக்க முடியாததால் தற்போது அங்கன்வாடி மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்தின் மூலம் மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும், புதிதாக இதற்கு 4, 600 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த கலந்தாய்வு மார்ச் நான்காம் தேதியுடன் முடிவடையும். பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Feb 25, 2022, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details