சென்னை:அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு போலீசார் இன்று(செப்.30) காலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கச்சிக்கோடா விரைவு ரயிலில் இருந்து இறங்கிய இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டனர். அதனால் போலீசார் அவர்கள் வைத்திருந்த 2 பைகளை சோதனை செய்த போது, அதில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்த பணத்திற் உண்டான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் செம்பியம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கஞ்சா சோதனையில் சிக்கிய ரூ.1.75 கோடி - 2 பேரிடம் விசாரணை - சௌகார்ப்பேட்டை
சென்னையில் கஞ்சா சோதனையின் போது அமலாக்கப்பிரிவு போலீசார் கணக்கில் வராத ரூ1.75 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் செம்பியம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஷேக்(22) மற்றும் சூரஜ்(22) என்பது தெரியவந்தது. அதோடு நகை வியாபாரம் செய்து வருவதாகவும், சௌகார்ப்பேட்டையில் நகை வாங்குவதற்காக ரூ.1.75 கோடி கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். ஆனால் பணத்திற்குண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததால் காவல்துறையினர் பணத்தினை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:போலீஸ் எனக்கூறி பண மோசடி... 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு...