தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜிப்லைன் நிறுவனத்தின் CFOஆக தீபக் அகூஜா நியமனம்

ட்ரோன் டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிப்லைன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டெஸ்லாவின் மூத்த அதிகாரி தீபக் அகூஜாவை தனது முதல் தலைமை வணிக மற்றும் நிதி அதிகாரியாக (CFO) நியமித்துள்ளது.

Zipline hires former Indian origin Deepak Ahuja  Indian origin Tesla CFO Deepak Ahuja  Drone delivery and logistics startup Zipline  Ahuja 1sr Zipline chief business financial officer  தீபக் அகூஜா  ஜிப்லைன்  ஜிப்லைன் நிறுவனத்தின் CFOஆக தீபக் அகூஜா  ட்ரோன் டெலிவரி  வெரிலி லைஃப் சயின்சஸ்  ஹெல்த்கேர் யூனிட்
தீபக் அகூஜா

By

Published : Sep 10, 2022, 3:41 PM IST

Alphabet-ன் ஹெல்த்கேர் யூனிட் வெரிலி லைஃப் சயின்சஸ் நிறுவனத்தில் முதல் தலைமை வணிக மற்றும் நிதி அதிகாரியாக பணிபுரியும் அகூஜா, செப்டம்பர் 30 முதல் ஜிப்லைனில் புதிய பொறுப்பைத் தொடங்குகிறார். இது குறித்து அகூஜா வெளியிட்ட அறிக்கையில், “ஜிப்லைன் குழு உருவாக்கி வரும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் இந்த அளவிலான தாக்கத்தை நான் அரிதாகவே பார்க்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “ஜிப்லைன், தனது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை ஆழமாக புரிந்துள்ளது. நேரம் மற்றும் பணத்தைச் சேமிப்பதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பமுடியாத மதிப்பை ஏற்கனவே வழங்கியுள்ளது. ட்ரோன் டெலிவரி மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்துள்ளது. ஜிப்லைன் தற்போது, வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் நுகர்வோருக்கு உலகின் மிகப்பெரிய உடனடி விநியோக அமைப்பை வடிவமைத்து இயக்குகிறது” என தெரிவித்திருந்தார்.

வெரிலிக்கு முன் டெஸ்லாவில் முதல் தலைமை வணிக மற்றும் நிதி அதிகாரியாக இருந்த அகூஜா, அங்கு, அங்கு பல விஷயங்களில், நிறுவனத்தின் லாபத்தை தூக்கிநிறுத்தி வைத்தார். ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் 15 வருட அனுபவத்துடன் அனுபவம் வாய்ந்த கார் தொழில்துறை நிதி நிர்வாகி அஹுஜா, 2008-ல் டெஸ்லா மோட்டார்ஸ் அதன் முதல் தலைமை வணிக மற்றும் நிதி அதிகாரியாக சேர்ந்தார்.

அகூஜா குறித்து ஜிப்லைனின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான கெல்லர் ரினாடோ கூறுகையில், “போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் புரட்சிகரமான நிறுவனங்களை உருவாக்க அகூஜா பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்டு வருகிறார். எங்கள் தடத்தை விரிவுபடுத்துவது, புதிய வகைகளை ஆதரிப்பது மற்றும் நீண்ட காலத்திற்கு வணிகத்தை உருவாக்குவது போன்றவற்றின் மூலம் அவரது சாதனைப் பதிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details