மும்பை: வாரயிறுதி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிகரிக்கத் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்ளில் 1,100 புள்ளிகள் அதிகரித்து மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 61 ஆயிரத்து 689 புள்ளிகளில் உச்சம் தொட்டது.
கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் முதல் முறையாக கடந்து சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்போசிஸ், எச்.டி.எப்.சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்தன.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 18 ஆயிரத்து 300 புள்ளிகளை கடந்து உச்சம் தொட்டது. அமெரிக்க பணவீக்கம் கணிக்கப்பட்டதை விட குறைந்தது உள்ளிட்ட காரணங்களே ஆசிய பங்குச் சந்தை உச்சம் தொட காரணமாக கருதப்படுகிறது.