தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

முதலீட்டு ஆலோசனைகள் - எதிர்கால சவால்களுக்கு இப்போதே திட்டமிடுங்கள் - அவசர தேவைகள் குறித்த திட்டமிடல்

உலக அளவில் காலநிலை மாறுபாடு, நாடுகளின் நிலைப்பாடு போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் பெரும் அளவில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.

Etv Bharatஎதிர்கால பொருளாதார மந்த நிலையை சரிகட்ட சேமிப்பு மற்றும் முதலீட்டு ஆலோசனைகள்
Etv Bharatஎதிர்கால பொருளாதார மந்த நிலையை சரிகட்ட சேமிப்பு மற்றும் முதலீட்டு ஆலோசனைகள்

By

Published : Sep 27, 2022, 4:43 PM IST

ஹைதராபாத்: ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நிலையான மற்றும் உறுதியான நிதி நிலைமை வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் நிலையான நிதி நிலைமை என்பது அவர்கள் அந்த நிலையை அடைய எவ்வாறு திட்டமிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடையும்போதுதான் நம் வாழ்க்கைத் தரம் மேம்படும். இந்த திட்டமிடல் நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மாற்றம் இல்லாத நிதிப் பயணத்தை உறுதி செய்கிறது.

இயல்பாகவே பொருளாதார மந்தநிலை போன்ற நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. அது போன்ற இக்கட்டான நிதி நெருக்கடியில் இந்த மந்தநிலை நமது இலக்குகளை தற்காலிகமாக தாமதப்படுத்தும். அதே சமயம், நமது குடும்பங்களுக்கு ஏற்படும் பாதகமான பாதிப்பைத் தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வலுவான நிதி நிலையை விரும்பும் குடும்பத்தினர் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள தொகையை மட்டும் செலவிட வேண்டும்.

இது உண்மையிலேயே சவாலான ஒரு செயல்முறைதான். எனவே நமது செலவுகளை வரிசையாகப் பட்டியலிட்டு, அதிகப் பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். இவ்வாறு பட்டியலிடுவது தேவையற்ற செலவினங்களைக் குறைக்க உதவும். நமது வருமானத்திற்கு ஏற்ப நமது சேமிப்பையும் அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் நமது செலவுகள் அதிகரிக்காமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மட்டுமே நம் குடும்பத்திற்கு நிலையான நிதி நிலையை உருவாக்க முடியும்.

காப்பீடு மற்றும் சேமிப்பு

முதலீடு குறித்த தகவல்கள்:எந்தவொரு குடும்பமும் நிலையான நிதிநிலையை அடைய முதலீடுகள் செய்வது அவசியம். ஏனெனில் நாம் முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்கும் போது முதலீட்டிற்கான நீண்ட கால பலன்களை பெற முடியும்.மேலும் முதலீடுகள் இரு சிறந்த முடிவு ஆகும். முதலீட்டில் நிதி இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இதில் உதாரணமாக, 40 வயதுடைய ஒருவர் பங்குசந்தைகளில் உள்ள பங்குளில் 70 முதல் 80 சதவீதம் வரை முதலீடு செய்யலாம்.இதனையடுத்து கடன் திட்டங்களிலும் தங்க நிதிகளிலும் இருபது முதல் முப்பது சதவீதம் வரை முதலீடு செய்யலாம். பின்னர் வயது அதிகரிக்கும் போது, ​​இதற்கான விகிதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு 60 வயதாகும்போது ​​ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பங்கு முதலீடுகள் 30 முதல் 60 சதவீதமாகக் குறைய வேண்டும். ​​தங்கத்தின் மீதான முதலீடு 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நாம் இறையாண்மை தங்கப் பத்திரங்கள், தங்க ப.ப.வ.நிதிகள் (பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள்) மற்றும் தங்க நிதிகளில் முதலீடு செய்யலாம்.

முதலீடு குறித்த தகவல்கள்

காப்பீடு மற்றும் சேமிப்பு:ஒரு குடும்பம் எந்த கஷ்டத்தையும் சமாளிக்கும் அளவுக்கு அதன் நிதி நிலையை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலை காப்பீடு மூலம் மட்டுமே இது சாத்தியம் ஆகும். ஒவ்வொரு வருமானம் பெறுபவரும் கட்டாயமாக ஆண்டு வருமானத்தில் 20 மடங்கு வரை காப்பீடுக்காக ஒதுக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பாதித்தால், ரூ.1 கோடி வரை காப்பீடு எடுக்க வேண்டும். மேலும் தனியாக ரூ.5 லட்சம் குடும்ப நல காப்பீடு தேவைப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களுக்கு குழு காப்பீடு இருந்தாலும், ஒருவர் அவருக்கென தனிப்பட்ட காப்பீட்டை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம், ஒரு சூப்பர் டாப்-அப் பாலிசியாவது எடுத்துக் கொள்ள வேண்டும். நிதித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சீரான திட்டமிடல் தேவைப்படுகிறது. செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முதலீடுகளைச் செய்யவும் வலுவான சுயவிருப்பம் மட்டுமே ஒருவருக்கு உதவும்.

அவசர தேவைகள் குறித்த திட்டமிடல்:எதிர்பாராத நிதிச் சிக்கல்களைச் சமாளிக்க நம்மிடம் அவசர செலவுகளுக்கான நிதிநிலை தயாராக இருக்க வேண்டும். இதற்காக நமது சேமிப்பில் நான்கில் ஒரு பங்கு இந்த தற்செயல் நிதிக்கு செல்ல வேண்டும். நாம் சேமிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாயில், 25 ரூபாய் இந்த அவசர செலவுக்காக சேமிக்கும் பங்கிற்கு செல்ல வேண்டும். மீதமுள்ள 75 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், ஒரு குடும்பம் 12 மாதங்களுக்கு போதுமான அவசர செலவுகளுக்கு தேவையான நிதி நிலையுடன் தயாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த நிதி தீர்ந்துவிட்டாலும், அதை விரைவாக நிரப்ப அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:கிரெடிட் கார்டு vs பே லேட்டர் - ஷாப்பிங் செய்ய எது சிறந்தது?

ABOUT THE AUTHOR

...view details