ஹைதராபாத்: கரோனா காலத்திற்குப் பிறகு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டியுள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்க தயாராகும் முதியோர் உள்பட அனைவருக்கும், எந்த வகையான பாலிசிகளை எடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழும்.
பாலிசி எடுப்பதற்கு முன்பு, நமது தேவைகளை மதிப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடல்நலப் பிரச்சினைகள் இல்லாத முதியோர், அதிக பிரீமியம் செலுத்தி பாலிசிகளை எடுக்கலாம் என்று கூறுகிறார்கள். முதியோர்கள் அனைவரும் பாலிசி எடுக்கலாம். ஓரு இன்சூரன்ஸ் பாலிசியை எப்போதும், முதலீட்டு திட்டத்துடன் ஒப்பிட முடியாது. எதிர்பாராமல் ஏதேனும் நடந்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன, முதலீட்டுத் திட்டங்களில் இத்தகைய பலன்கள் இருக்காது.
இதுதொடர்பாக பேசிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர்.எம்.விஷாகா, "பாலிசி என்பது பாலிசி எடுப்பவருக்கும் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கையின் ஒப்பந்தம். எனவே, பாலிசி எடுக்கும் நபர் தேவையான அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்.