தமிழ்நாடு

tamil nadu

அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த யமஹா மோட்டார்!

By

Published : Oct 31, 2020, 8:58 PM IST

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா மோட்டார் நிறுவனம், தங்களின் உதிரி பாகங்களை விற்க அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

yamaha-ties-up-with-amazon-india-to-sell-apparels-accessories-online
yamaha-ties-up-with-amazon-india-to-sell-apparels-accessories-online

இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் யமஹா நிறுவனமும், இணையதள விற்பனை நிறுவனமான அமேசானும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், யமஹா நிறுவனத்தின் டி ஷர்ட், ஜாக்கெட், கீ செய்ன்கள், ஸ்டிக்கர்கள், உதிரி பாகங்கள் ஆகியவற்றை அமேசான் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

இந்தியாவில் உற்பத்தி செய்துவரும் இருசக்கர வாகன நிறுவனம், இணையதளம் மூலம் தங்களது பொருள்களை விற்பனை செய்வது முதல்முறையாகும்.

இதுகுறித்து யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் சித்தாரா கூறுகையில், ''இந்தியச் சந்தையில் எங்களின் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க தீவிரம் காட்டிவருகின்றோம். அதற்காக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியமானது. எங்களது வாடிக்கையாளர்கள் எளிதாக அணுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

சமீபத்தில் யமஹா நிறுவனம் இணையதளம் மூலம் தங்களது வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. தற்போது உதிரி பாகங்களையும் இணையதளம் மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இதையும் படிங்க:75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலைத் தூள்!

ABOUT THE AUTHOR

...view details