கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனால் சந்தைகளில் காய்கறிகளை வாங்கிச் செல்ல அதிகம் யாரும் இல்லாததால் காய்கறிகளின் விற்பனை கடுமையாக குறைந்துள்ளது.
அதன்படி மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு, தக்காளியின் விலை சரிந்துள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற இடங்களில் கடந்த மே 22ஆம் தேதி வரை ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆகிவந்தது.
இந்நிலையில் விற்பனை கடுமையாக குறைந்ததால், தற்போது ஒரு கிலோ தக்காளி கிலோவுக்கு 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை ஆகிவருகிறது.
கடும் விலை வீழ்ச்சியில் தக்காளி விற்பனையாவதால், பொதுமக்கள் அதிகம் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். அதே சமயம் பாடுபட்டு உழைத்த விவசாயிகளுக்குச் சரியான கூலி கிடைக்காததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் சில சந்தைகளில் 100 கிலோ தக்காளி 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட உதவும் சீன செயற்கைக்கோள்