தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அண்ணன் நிறுவனத்தில் பங்குகள் உயரும் நிலையில், தம்பி நிறுவனத்தில் கடும்சரிவு!

மும்பை: பங்குச்சந்தையில் சிறப்பாக செயல்படும் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், கடும் சரிவில் வர்த்தகமாகும் பங்குகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இடம் பிடித்துள்ளது.

stock market news

By

Published : Nov 19, 2019, 1:58 PM IST

முகேஷ் அம்பானி தலைமை அதிகாரியாக செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 1,505 புள்ளிகளுக்கு மேல் வர்தகமாகும் நிலையில், அவரது சகோதரரான அனில் அம்பானி இயக்குநர் பதவியில் இருந்து விலகிய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.55 புள்ளிகள் என சரிவான வர்த்தகத்தில் உள்ளன.

திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்தை தற்போது முகேஷ் அம்பானி மற்றும் அவரது தம்பி அனில் அம்பானி நிர்வாகித்து வருகின்றனர். 6 மாபெரும் நிறுவனங்களை உள்ளடக்கிய ரிலையன்ஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries Limited), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தை முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Reliance Communications), ரிலையன்ஸ் கேப்பிடல் (Reliance Capital), ரிலையன்ஸ் பவர்(Reliance Power) போன்ற நிறுவனங்களை அனில் அம்பானியும் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 52 வாரங்கள் கண்டிடாத கடும் வீழ்ச்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!

நீண்ட நாட்களாவே அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சரிவைச் சந்தித்து வந்தது. பங்குச்சந்தையில் கடந்த 10 வருடங்களாகவே மந்த நிலையில் செயல்பட்டு வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், 2017ஆம் ஆண்டு முதல் 35 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தமாகி வந்தது. அதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டு FY20Q2 இரண்டாம் காலாண்டின் முடிவில் 30 ஆயிரம் கோடிக்கும் மேல் நஷ்டத்தைச் சந்தித்தது.என்ன செய்வது என்று அறியாமல், அனில் அம்பானி உள்பட அந்நிறுவனத்தின் பெரும்பாலான இயக்குநர்கள் பதவிவை ராஜினாமா செய்தனர்.

இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் 0.55 புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகமாகி வருகிறது. அதே சமயம் சிறப்பாக செயல்படும் பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இடம் பிடித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு வேறு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் அதிக அளவு உயர்வையும், மற்றொரு நிறுவனம் அதிக அளவு சரிவையும் சந்தித்திருப்பது வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி!

ABOUT THE AUTHOR

...view details