மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 1,556.06 (3.31 விழுக்காடு) புள்ளிகள் குறைந்து 45,404.63 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 477.95 (3.47 விழுக்காடு) புள்ளிகள் சரிந்து 13,282.60 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்குகள் சுமார் 9 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டது. அதற்கு அடுத்தபடியாக இண்டஸ்இன்ட் வங்கி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
கடந்த சில நாட்களாக சிறப்பான உயர்வைக் கண்டு உச்சம் தொட்ட இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 முடக்கம் அமலுக்கு வருவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வங்கி, நிதி, எரிவாயு உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் கடும் சரிவை இன்று கண்டன.
இதையும் படிங்க:ஒரு கோடியைத் தாண்டிய கோவிட்-19: பொருளாதாரத்தின் நிலை ஒரு பார்வை