பொருளாதார மந்தநிலையின் தாக்கமானது பங்குச்சந்தையிலும் எதிரொலித்துவருகிறது. நடப்பாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப்பின் பங்குச்சந்தைகள் பெரும் ஆட்டத்தைச் சந்தித்தன. இந்நிலையில், வாரத்தொடக்க நாளான நேற்று சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை இன்றும் கடும் சரிவைக் கண்டுள்ளது.
பங்குச்சந்தையில் மீண்டும் கடும் சரிவு! - மும்பை பங்குச்சந்தை நிலவரம்
மும்பை: பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக 200 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் நடைபெற்றுவருகிறது.
Share market
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 873 புள்ளிகளாக வர்த்தகமாகிவருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 78 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 924 புள்ளிகளாக வர்த்தகமாகிவருகிறது. உற்பத்தி, தொழில் துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.