இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாள்களாகவே சரிவைச் சந்தித்துவந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதலே ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவருகிறது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 1,400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் 798.17 புள்ளிகள் உயர்ந்து 32,169.29 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 229.30 புள்ளிகள் உயர்ந்து 9,425.85 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்குகள் ஏழு விழுக்காட்டிற்கும் மேல் உயர்வைக் கண்டது. அதேபோல எல் & டி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எம் அண்ட் எம், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றமடைந்தன. மறுபுறம், நெஸ்லே இந்தியா, பாரதி ஏர்டெல், சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிவைச் சந்தித்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,662.03 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றனர்.
காரணம் என்ன?