தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் தாக்கல் எதிரொலி: 2,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் - மும்பை பங்குச்சந்தை உயர்வு

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியப் பங்குச்சந்தைகள் இரண்டாயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது.

Sensex
Sensex

By

Published : Feb 1, 2021, 2:39 PM IST

2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல்செய்தார். கோவிட்-19க்குப் பின் தாக்கல்செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நிதிநிலை அறிக்கைத் தாக்கலுக்குப் பின் இந்தியப் பங்குச்சந்தைகள் சிறப்பான உயர்வைக் கண்டுள்ளன. பட்ஜெட் உரை முடிந்ததும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2,064 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 350 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 559 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 194 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக முடிவிலும் பங்குச்சந்தைகள் சிறப்பான உயர்வுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வரி குறித்து ஆட்சியாளர்களுக்கு வள்ளுவர் கூறுவது என்ன? குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details