2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்செய்கிறார். கோவிட்-19க்குப் பின் தாக்கல்செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நிதிநிலை அறிக்கை நாளில் இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 46 ஆயிரத்து 728 புள்ளிகளில் வர்த்தகமானது.