தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: வாரத்தின் முதல் நாள் உயர்வு கண்ட பங்குச்சந்தைகள் - வாரத்தின் முதல் நாள் உயர்வு கண்ட பங்குச்சந்தைகள்

கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று சிறப்பான உயர்வைச் சந்தித்தன.

Sensex
Sensex

By

Published : Sep 28, 2020, 7:43 PM IST

வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 592.97 புள்ளிகள் (1.59 விழுக்காடு) உயர்ந்து 37,981.63 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177.30 புள்ளிகள் (1.60 விழுக்காடு) உயர்ந்து 11,227.55 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தன. இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த வரம் கடும் சரிவைக் கண்டுவந்த வாரத்தின் முதல் நாளான இன்று உயர்வைச் சந்தித்தது வர்த்தகர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சுமார் 8 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் பைனானஸ், ஆக்ஸிஸ் வங்கி, பவர் கிரிட், ஓ.என்.ஜி.சி., ஐ.சி.சி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

அதேவேளை, இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,720-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.59,540-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.15க்கும், டீசல் ரூ.76.19க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி : நிறுவனங்களை பாதுகாக்க திவால் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு ரத்து

ABOUT THE AUTHOR

...view details