மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிச.29) 259.33 (0.55 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 47,613.08 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 59.40 (0.43 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 13,967.60 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக இண்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. அதேவேளை நெஸ்லே, என்.டி.பி.சி., பவர் கிரிட், டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
கோவிட்-19 சிறப்பு நிதி மசோதாவை அமெரிக்கா அண்மையில் நிறைவேற்றியதன் விளைவாக, இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இது வர்த்தகர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஸ்கோடா நிறுவன கார் விலை ஜனவரி முதல் உயர்வு