தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச்சந்தை நிலவரம் - நேற்று சரிவு; இன்று உயர்வு

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இரு நாள்கள் கடும் சரிவைக் கண்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று நல்ல ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

பங்குச்சந்தை நிலவரம்
பங்குச்சந்தை நிலவரம்

By

Published : Feb 25, 2022, 6:28 PM IST

திருச்சி:ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகளில் சில நாட்களாக தொடர் சரிவு காணப்பட்டு வந்த நிலையில் இன்று (பிப்.25) காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது. உலகச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, குறைந்த விலையில் தரமான பங்குகள் கிடைத்ததால் வாங்கி குவிக்க தொடங்கினர் முதலீட்டாளர்கள் ஆகவே உயர ஆரம்பித்தன.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,328 புள்ளிகள் உயர்ந்து 55,858 புள்ளிகளில் நிறைவு செய்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 410 புள்ளிகள் உயர்ந்து 16,658 புள்ளிகளில் நிறைவு செய்தது. இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா 9 விழுக்காடும், டாடா மோட்டார்ஸ் 7 விழுக்காடும், அதானி போர்ட்ஸ், இந்துஸிண்ட் வங்கி தலா 6 சதவிகிதமும் பஜாஜ் ஃபைனான்ஸ் 5 விழுக்காடும் உயர்ந்து வர்த்தகமாகின.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது. போர் முடிவிற்கு வரும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலையும் சரியத்தொடங்கும். பங்குச்சந்தை வர்த்தகம் முடிந்தபின் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் திங்கட்கிழமையும் பங்குச்சந்தைகள் நன்றாக பரிணாமிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படிங்க:வெறும் 45 விநாடிகளில் ரூ.1.75 கோடி சம்பாதித்த இளம் யூ-ட்யூபர்!

ABOUT THE AUTHOR

...view details