தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை - மும்பை பங்குச்சந்தை குறியீட்டுயெண் சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது

இந்திய பங்குச்சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகள்

By

Published : Jan 7, 2021, 12:31 PM IST

மும்பை:இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் (0.56 விழுக்காடு) உயர்ந்து 48,444.75 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80.95 புள்ளிகள் (0.57 விழுக்காடு) சரிந்து 14,227.20புள்ளிகளிலும் இன்று வர்த்தகமாக தொடங்கியது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

இதில், பவர்கிரிட் பங்குகள் 2 விழுக்காடு உயர்வு கண்டன. அதனைத்தொடர்ந்து எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் பேங்க், எல்&டி, ஆக்சிஸ் பேங்க், ஓஎன்ஜிசி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகளும் ஏற்றம் கண்டன.

அதேவேளை, டிசிஎஸ், ஹெச்யுஎல், இன்போசிஸ் பங்குகள் இறக்கம் கண்டன.

நேற்றைய (ஜன.6) பங்குச்சந்தை முடிவில், சென்செக்ஸ் 263.72 புள்ளிகள் சரிந்து 48,174.06 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேசமயம், நிஃப்டி 53.25 புள்ளிகள் சரிந்து 14,146.25 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவுபெற்றது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை:

சர்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.79 விழுக்காடு உயர்ந்து 54.73 அமெரிக்க டாலராக இருந்தது.

ஆசிய சந்தை:

நேற்றைய நிலவரப்படி, ஆசியாவின் ஷாங்காய், டோக்கிய சியால் ஆகிய நகரங்களில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டது. அதேபோல் ஹாங்காங்கில் பங்குச்சந்தை புள்ளிகள் இறக்கத்துடன் காணப்பட்டன.

இதையும் படிங்க:தொடர்ந்து உயர்வு... குறையுமா தங்கம் விலை - நிபுணர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details