இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன. 14) சுணக்கமான வர்த்தகத்தை கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சென்செக்ஸ் 24.79 (0.05 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 49,492.32 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 1.40 (0.01 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 14,564.85 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
இன்றைய வர்த்தக நாளில் பஜாஜ் பைனான்ஸ், டைட்டான், சன் பார்மா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
அதேவேளை, எம் அண்டு எம், பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
இன்று ஆசிய பங்குச்சந்தைகள் பெரும்பாலும் சரிவை கண்டன. ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையில், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச்சந்தை மட்டும் உயர்வு கண்டன.
இதையும் படிங்க:இரண்டரை கோடி பயனாளர்கள்: வாட்ஸ்அப்பால் ஹிட்டான டெலிகிராம்!