தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

திமிறிய காளை... பதுங்கிய கரடி...! - மும்பை பங்கு சந்தை

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று பி.எஸ்.இ. 87.39 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டன. ஹெச்.டி.எஃப்.சி., ஐ.டி.சி. உள்ளிட்ட பங்குகள் லாபகரமாக வர்த்தகமாகின.

Bse

By

Published : Oct 14, 2019, 6:08 PM IST

இந்திய பங்குச் சந்தைகள் இன்று தொடக்கம் முதல் உயர்ந்து காணப்பட்டன. வர்த்தக நிறைவில், மும்பை பங்குச்சந்தை 87.39 புள்ளிகள் உயர்ந்து 38,214.47 என வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 36 புள்ளிகள் அதிகரித்து 11,329.80 என வர்த்தகமானது.

இதையும் படிக்கலாம்:அந்நிய செலாவணி ரூ.30 ஆயிரம் கோடி அதிகரிப்பு!

டாடா மோட்டார், வேதாந்தா, டாடா ஸ்டீல், சன் பார்மஸி, பஜாஜ் ஆட்டோ, இன்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்.யூ.எல்., எஸ்.பி.ஐ. பங்குகள் நான்கு சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டன. இன்போசிஸ், பவர்கிரீட், டெக்எம், கோடாக் வங்கி, டி.சி.எஸ். வங்கிப் பங்குகளும் 3 சதவீதம் வரை உயர்வைக் கண்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவு நாளில் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி. 246.08 புள்ளிகள் அதிகரித்து 38,127.74 எனவும் தேசிய பங்குச்சந்தை என்.எஸ்.சி 66.70 புள்ளிகள் உயர்ந்து 11,301.25 எனவும் வர்த்தகம் ஆகியிருந்தது.

இந்த வர்த்தக உயர்வு இன்றும் தொடர்ந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பொருளாதார வல்லுநர்கள், ஆசிய பங்குச்சந்தையில் நிலவிய சாதகமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் உயர்ந்து காணப்பட்டன எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: வர்த்தகத்தை மேம்படுத்த புதிய யுக்திக்குத் தயாராகும் இந்தியா-சீனா!

ABOUT THE AUTHOR

...view details