நேற்று வர்த்தக விடுமுறையை அடுத்து இன்று பங்குச்சந்தை தொடக்கம் முதலே சரிவை சந்தித்தது. இதற்கிடையே தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் மீதான விசில்ப்ளோவர் குற்றச்சாட்டுகளால் அதன் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. கிட்டத்தட்ட 16.65 சதவிகித சரிவை இந்த நிறுவனத்தின் பங்குகள் சந்தித்தன. மேலும்,
- டாடா மோட்டார்ஸ் 4 சதவிகிதம்,
- பஜாஜ் ஃபின்சர்வ் 3 சதவிகிதம்,
- ஏர்டெல், ஹெசிஎல் தலா 2.8 சதவிகிதம்
என முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. அதில் ஐசிஐசிஐ, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தன.