தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய பங்குச் சந்தைகள் உச்சம் தொட்ட நிலையில் 200 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து 43,939.09 ஆகவும், நிஃப்டி 62 புள்ளிகள் சரிந்து 12,875.45 எனவும் வர்த்தகமாகிறது.

Sensex tumbled over 200 points Nifty slips BSE index இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி
Sensex tumbled over 200 points Nifty slips BSE index இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் நிஃப்டி

By

Published : Nov 19, 2020, 11:07 AM IST

மும்பை: இந்திய பங்கு சந்தைகளின் நவ.19ஆம் தேதி வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி. டுவின்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

சென்செக்ஸை பொருத்தமட்டில் தொடக்க வர்த்தகத்தில் 240.96 புள்ளிகள் சரிந்து 43,939.09 என வர்த்தகம் ஆகிறது. இதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டியும் 0.49 சதவீதம் குறைத்து 62.80 புள்ளிகள் வீழ்ந்து 12,875.45 ஆக உள்ளது.

இந்தியப் பங்கு சந்தையில் ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஒருபுறம் பின்தங்கியுள்ள நிலையில், மறுபுறம் பஜாஜ் பின்சர்வ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் லாபத்தில் முன்னேறுகின்றன.

நேற்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 227.34 புள்ளிகள் உயர்ந்து 44 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் நிஃப்டியும் புதிய உயரத்தை தொட்டது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலே இந்திய பங்குச் சந்தைகள் 200 புள்ளிகள் வீழ்ந்துள்ளன. மும்பை பங்கு சந்தை 44 ஆயிரத்தை கடந்தது சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபோன் பேட்டரி குறைபாடு: ரூ.839 கோடி செலவிடும் ஆப்பிள் நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details