இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன. 11) வரலாறு காணாத உச்சத்தைக் கண்டன. மும்பை பங்குச்சந்தை முதன்முறையாக 49 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 486.81 (ஒரு விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 49,269.32 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 137.50 (0.96 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 14,484.75 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, ஹெச்.சி.எல் வங்கியின் பங்குகள் 6 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், ஹெச்.டி.எஃப்.சி., பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. அதேவேளை பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், கோடாக் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அது வர்த்தகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்து சந்தை உயர்வைக் கண்டன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சிமென்ட் தொழிற்சாலைகள் சுயலாபத்திற்காக சந்தையை துஷ்பிரயோகம் செய்கின்றன - நிதின் கட்கரி