தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

50ஆயிரத்தை கடந்து சென்ற சென்செக்ஸ், படார் என்று சரிந்த சோகம்!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167.36 புள்ளிகள் சரிந்து 49,624.76ஆக இன்றைய நாள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச் சந்தை எண் நிஃப்டி 54.35 புள்ளிகள் குறைந்து 14,590.35ஆக வர்த்தகத்தை நிறைவுற்றது.

Sensex crosses 50k mark, Profit booking, Sensex today, Nifty today, market closing, share market news in tamil, vanigam news in tamil, today news in tamil, பங்கு சந்தை செய்திகள், சென்செக்ஸ் புள்ளிகள், நிஃப்டி புள்ளிகள், இந்திய ரூபாயின் மதிப்பு
Sensex crosses 50k mark

By

Published : Jan 21, 2021, 8:58 PM IST

மும்பை:இன்று பச்சை நிறத்தில் தொடங்கிய சென்செக்ஸ் 50ஆயிரம் புள்ளிகளைக் கடந்து முதலீட்டாளர்களுக்கு இன்பத்தை அளித்து, முடிவில் 167 புள்ளிகள் குறைந்து சோகத்தை அளித்திருக்கிறது.

இன்றைய வர்த்தக நாளில் ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 4 விழுக்காடு அளவு சரிவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, இண்டஸ்இந்த் வங்கி, என்டிபிசி, சன் ஃபார்மா, ஐடிசி ஆகிய நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தனர்.

ஏற்றம் கண்ட பங்குகள் வரிசையில், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ், ஏசியன் பெய்ண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 6 பைசா உயர்ந்து ஐந்து மாத உயர்வைக் கண்டு ரூ.72.99ஆக இருந்தது.

ABOUT THE AUTHOR

...view details