டெல்லி: நாட்டில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து, இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கண்ணீர் வரவழைத்த வெங்காய விலை; இறக்குமதிக்கு தளர்வளித்த மத்திய அரசு!
வழக்கமாக விற்பனையாகும் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் 50 முதல் 80 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 60 முதல் 95 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை போக்க, மத்திய அரசு வெங்காய இறக்குமதிக்கு தளர்வளித்துள்ளது.
வழக்கமாக விற்பனையாகும் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் 50 முதல் 80 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 60 முதல் 95 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தற்போது வெங்காய விலை உயர்வைக் கருத்தில்கொண்டு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், “வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்காக தற்காலிகமாக; அதாவது டிசம்பர் 15ஆம் தேதி வரை தளர்வு அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்படுகிறது.