தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வேலையின்மை, பொருளாதார மந்தநிலை நீண்டகாலம் நீடிக்கும்: உலக பொருளாதார மன்றம்

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார சரிவும், வேலையின்மையும் நீண்ட காலம் நீடிக்கும் என உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

Recession, job losses,
Recession job losses

By

Published : May 20, 2020, 12:42 AM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், மாபெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்திக்கும் சூழலில், பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இன்று உலக பொருளாதார மன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கரோனா நெருக்கடி வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. இது நீண்டகால தாக்கங்களுடன் ஒரு பொருளாதார நெருக்கடியைத் தூண்டியுள்ளது.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வித்தியாசமாக விஷயங்களைச் செய்வதற்கும், நிலையான, நெகிழக்கூடிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சிறந்த பொருளாதாரங்களை மீண்டும் உருவாக்குவதற்கும் இப்போது எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது, என உலக பொருளாதார மன்றத்தின் மேலாண்மை இயக்குநரான சாடியா ஜாஹிடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக சுற்றுச்சூழல் குறிக்கோள்கள் நிராகரிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கங்கள் பசுமை மீட்புக்கு திட்டம் ஒன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

மேலும் உலக பொருளாதார மன்றம் (WEF) நடத்திய ஆய்வில், கரோனா பாதிப்பில் தற்போது ஏற்பட்ட பாதிப்பை விட வருங்காலத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். வேலையின்மை, பொருளாதார மந்தநிலை நீண்ட காலம் நீடிக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை - கரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலி

ABOUT THE AUTHOR

...view details