தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல் விலை? - கச்சா எண்ணெய் விலை

டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தற்போது 83.71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதே அதிகமாகும்.

Petrol prices inch towards all-time high
Petrol prices inch towards all-time high

By

Published : Dec 7, 2020, 3:51 PM IST

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. அதன்படி இன்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா உயத்தப்பட்டு, 83.71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டு, 73.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 18 நாள்களில் 15 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.65 ரூபாயும் டீசல் விலை 3.41 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டதே அதிகமாகும். ஆனால், அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 80.08 டாலருக்கு விற்பனையானது. இப்போது கச்சா எண்ணெய் 50 டாலருக்கே வர்த்தகமாகிவருகிறது.

கரோனாவால் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கு கீழும் சென்றது.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் இரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்த வார பங்குச்சந்தை எப்படியிருக்கும்?

ABOUT THE AUTHOR

...view details