தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் - இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்

மும்பை: கரோனா பாதிப்பு காரணமாக சமீப காலமாக சரிவைச் சந்தித்துவந்த இந்திய பங்குசந்தைகள் இன்று ஏற்றத்தைக் கண்டுள்ளன.

BSE
BSE

By

Published : Apr 15, 2020, 1:17 PM IST

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் 22 நாட்களாக இந்தியா லாக் டவுனில் உள்ளது. இதன் காரணமாக நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர் முடக்கத்தில் உள்ள நிலையில், இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.

தொடர் சரிவைச் சந்தித்துவந்த பங்குச்சந்தைகளில் முதலீடு செய்த வர்த்தகர்களின் வருவாய் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டமடைந்த நிலையில், கடந்த சில நாள்களாக பங்குச்சந்தைகள் மீட்சி கண்டுவருகின்றன.

ஏப்ரல் 20ஆம் தேதிக்குப்பின் கரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் தகுந்த பாதுகாப்புடன் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 31 ஆயிரத்து 200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தமாகிவருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 9 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிவருகிறது.

இதையும் படிங்க:கரோனா - இந்தியாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த சுந்தர் பிச்சை!

ABOUT THE AUTHOR

...view details