தற்போது மத்திய அரசு பருப்புக்கு ஐந்து சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பருப்புக்கு ஐந்து சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி என்பது அதிகமான ஒன்று என்றும், இதனால் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனவும் கொள்முதல் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பியபோது, ஐந்து சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி என்பது பிராண்டட் பருப்புகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. பிராண்டட் அல்லாமல் விற்கப்படும் பருப்புக்கு எந்த ஒரு சரக்கு மற்றும் சேவை வரியும் விதிக்கப்படவில்லை என மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.