டெல்லி: திரையரங்குகள் திறப்பது குறித்த மத்திய அரசின் அறிவிப்பையடுத்து, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள் 18 விழுக்காடு வரை ஏற்றத்தைக் கண்டுள்ளது.
அக். 15 முதல் திரையரங்குகள்: தலைநிமிர்த்திய அத்துறை பங்குகள்! - tamil business news
அக்டோபர் 15ஆம் தேதிமுதல் 50 விழுக்காடு இருக்கைகளைக் கொண்டு திரையரங்குகளை இயக்கலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற திரையரங்க நிறுவன பங்குகள் 18 விழுக்காடு வரை அதிகரித்து வர்த்தகமாகின.
மும்பை பங்குச் சந்தையில், பி.வி.ஆர். பங்கின் விலை 17.63 விழுக்காடு அதிகரித்து, ரூ.1,395ஆக இருந்தது. ஐநாக்ஸ் பங்கு 17.63 விழுக்காடு உயர்வுடன் ரூ.318.20ஆக இருந்தது.
மத்திய அரசு நேற்று முன்தினம் (செப். 30) திரையரங்குகள், பொழுதுபோக்கு தொடர்பான அனைத்தையும் அக்டோபர் 15ஆம் தேதிமுதல், 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் திறக்க அனுமதி அளித்ததன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதாலும், ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தது.