தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குசந்தையில் இன்று கருப்பு தினம் - பங்குசந்தையில் இன்று கருப்பு தினம்

மும்பை: பங்குச்சந்தை வர்த்தகத்தின் வார இறுதி நாளான இன்று, வர்த்தக முடிவின் போது சென்செக்ஸ் 1,448 புள்ளிகளுக்கு மேல் சரிந்து கடும் சரிவை சந்தித்துள்ளது

Stock Market Update
Stock Market Update

By

Published : Feb 28, 2020, 7:17 PM IST

நாளுக்கு நாள் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை நோக்கி செல்லும் நிலையில், இன்றைய வர்த்தக முடிவின்போது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1448.37 புள்ளிகள் சரிந்து 38,297.29 என வர்த்தமாகியுள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 431 புள்ளிகள் சரிந்து 11,201.75 என முடிந்துள்ளது.

இந்த வார தொடக்கம் முதல் இறுதி வரை சென்செஸ், நிஃப்டி ஆகியவை கடும் சரிவை சந்தித்துள்ளன. கிட்டத்தட்ட 42000 புள்ளிகள் வரை சென்ற சென்செக்ஸ் தற்போது 38,297.29 புள்ளிகளுக்கு வர்த்தமாகியுள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டியில் உள்ள பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்த பங்குதாரர்கள் அனைவருமே தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

சரிவை சந்தித்த பங்குகள்

டெக் மஹிந்திரா

டாடா ஸ்டீல்

பஜாஜ் பைனான்ஸ் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

பாரத ஸ்டேட் வங்கி

சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டம் கண்ட உலகச் சந்தை; சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details