மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 495(1.09%) புள்ளிகள் உயர்ந்து 46,103.50 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தொடர்ந்து ஏழாவது நாளாக ஏற்றம் கண்ட தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 136.15 (1.02%) புள்ளிகள் உயர்ந்து 13,529.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக UPL நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடுற்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல ஏசியன் பெயின்ட்ஸ், இந்தியன் ஆயில், கோடாக் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
மறுபுறம் ஹிண்டால்கோ, ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ரா சிமெண்ட்ஸ், விப்ரோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.