மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 600 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 704.37 புள்ளிகள் (1.68 விழுக்காடு) உயர்ந்து 42,597.43 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.50 புள்ளிகள் (1.61 விழுக்காடு) உயர்ந்து 12,461.05 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக டிவிஸ்லேப் நிறுவனத்தின் பங்குகள் 5.49 விழுக்காடு ஏற்றம் கண்டது. மேலும், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனத்தின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
மறுபுறம் சிப்லா, அதானிபோர்ட்ஸ், மாருதி, ஐடிசி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.