தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொடர்ந்து 2ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

மும்பை: இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

Market Roundup
Market Roundup

By

Published : Sep 2, 2020, 6:45 PM IST

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப்டம்பர் 1) வர்த்தகமானதைவிட சுமார் 65 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. சரிவிலேயே சென்று கொண்டிருந்த இந்திய பங்குச்சந்தை, சர்வதேச பங்குச் சந்தைகளின் தாக்கம் காரணமாக ஏற்றம் கண்டது.

இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 185.23 புள்ளிகள் (0.48 விழுக்காடு) உயர்ந்து 39,086.03 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 64.75 புள்ளிகள் (0.56 விழுக்காடு) குறைந்து 11,535 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் ஆறு விழுக்காடு வரை உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதைத்தொடர்ந்து பவர் கிரிட், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.சி.எல் டெக், ஓ.என்.ஜி.சி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் பஜாஜ் ஆட்டோ, ஆசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை

சர்வதேச பங்குச் சந்தை

சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டும், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அதே நேரம், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 0.04 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 45.60 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.

இதையும் படிங்க:சரிவைக் கண்ட ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி வசூல்

ABOUT THE AUTHOR

...view details