கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான செய்திகள் வெளியான தொடங்கியதில் இருந்தே, இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்கண்டு வர்த்தகமாகிவருகின்றன.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 250 புள்ளிகள் உயர்ந்து 45,682 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கியது. சென்செக்ஸ் தற்போது 283.07 புள்ளிகள் உயர்ந்து, 45,710.04 புள்ளிகளில் வர்த்தமாகிவருகிறது.
அதேபோல, 13,393 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை தொடங்கிய தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, தற்போது 140.95 புள்ளிகள் உயர்ந்து 13,533 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக மாருதி நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடு ஏற்றம்கண்டது. அதேபோல பஜாஜ் ஆட்டோ, எம்&எம், ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி., ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டன.
மறுபுறம், டெக் மஹேந்திரா, சன் பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
அந்நிய முதலீட்டாளர்கள்