2019-20ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப்பின் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி தொடர் சரிவை சந்தித்துவருகின்றன. நிதிநிலை அறிக்கையில் பெரு நிறுவனங்களை பாதிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தச் சரிவானது ஏற்பட்டதாகச் சந்தை நிபுணர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாகப் பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகத்தை காணத் தொடங்கியுள்ளது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 636 புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 176 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன.