தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வரலாற்றில் முதல்முறையாக 55,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ் - ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

வரலாற்றில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஆக.13) 55,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகியுள்ளது.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்

By

Published : Aug 13, 2021, 10:51 PM IST

இன்றைய வர்த்தகநாள் முடிவில் சென்செக்ஸ் 593.31 புள்ளிகள் (1.08 விழுக்காடு) உயர்ந்து 55,437.29 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 164.70 (1.01 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 16,529.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது. கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பின் மட்டும் சென்செக்ஸ் ஐந்தாயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்வை சந்தித்துள்ளது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக, டி.சி.எஸ். நிறுவன பங்குகள் மூன்று விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாரதி ஏர்டெல், எச்.சி.எல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனப் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், இன்டஸ் இன்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டன.

இதையும் படிங்க:விமானப் பயண கனவுக்கு செக் வைத்த ஒன்றிய அரசு - சேவைக் கட்டணம் 12.5% உயர்வு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details