தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்துவருகிறது. ஜனவரியில் ரூ. 25 ஆயிரத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, ஜூன் மாதம் ரூ. 26 ஆயிரத்தையும் ஆகஸ்ட் மாதம் ரூ. 27 ஆயிரம் ரூபாயை கடந்தது.
புதிய உச்சத்தைதொட்ட தங்கம் விலை...! - வெள்ளி
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை புது உச்சமாக ரூ. 28,500ஐ கடந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை
சென்னையில் நேற்று ரூ.28,376-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் 22 கேரட் தங்கம், இன்று ரூ.192 உயர்ந்து ரூ. 28,568க்கு விற்பனையாகி வருகிறது. ரூ. 3547க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 24 உயர்ந்து ரூ. 3,571க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி ஒரு கிலோ, ரூ.1100 அதிகரித்து ரூ. 47,900ஆக விற்பனையாகி வருகிறது.