விலையுயர்ந்த கற்கள், நகைகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வர்த்தகம் செய்வதில் இந்திய முக்கிய இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் நகைகள், விலையுயர்ந்த கற்களை இறக்குமதி செய்கின்றன.
நகை ஏற்றுமதியில் சரிவைக் கண்ட இந்தியா! - இந்தியா
பல்வேறு வரி விதிப்புகளின் காரணமாக நகைகள், விலையுயர்ந்த கற்கள் ஏற்றுமதியில் இந்தியா கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 10.6 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கான வர்த்தக வருவாயை இந்தியா ஈட்டுகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டில் இந்த ஏற்றுமதியானது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
அதன்படி, சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க வரி போன்றவை அதிகரித்ததன் மூலம் 8.48 சதவிகிதம் அளவிற்கு ஏற்றுமதியில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது இந்தியா. 2018ஆம் ஆண்டு 10.6 லட்சம் அமெரிக்க டாலராக இருந்த வர்த்தக வருவாய், இந்தாண்டு 8.48 லட்சம் டாலாரக குறைந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு வியாபாரிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.