அதானி குழுமத்தைச் சேர்ந்த பெஞ்ச் தெர்மல் எனர்ஜி நிறுவனம், மத்தியப் பிரதேச பவர் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன், 1320 மெகாவாட் மின்சாரத்தினை நீண்டகால அடிப்படையில் உற்பத்தி செய்வதற்கான, மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மத்தியப் பிரதேசத்தில் அதானி குழுமம், தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க, மத்தியப் பிரதேச ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு மத்தியப்பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முறையாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி மின் துறையின் நீண்டகால வளர்ச்சி திறன் குறித்த, நிறுவனத்தின் நம்பிக்கையையும், அனைவருக்கும் மின் சக்தியின் லட்சிய இலக்கையும் அடைவதின் முக்கியத்துவத்தினையும் உறுதிப்படுத்துகிறது என்றும் அறியப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் உற்பத்தித் திறனை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் கிடைத்த அனுபவங்களை இணைப்பதில், அதானி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.