தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

பொருள் வணிகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இந்த மாதத்தில் அதிகபட்ச உயர்வை எட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை உயர்வு

By

Published : Sep 13, 2021, 7:32 PM IST

டெல்லி: பொருள் வணிகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாதத்தின் அதிகபட்ச விலையை எட்டி வர்த்தகமாகி உள்ளது.

இன்றைய வர்த்தக நாளில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.98 விழுக்காடு அளவு உயர்வுடன் 50 ரூபாய் உயர்ந்து 5,177 ரூபாயாக இருந்தது.

தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் நிலவும் தேவையின் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் டெக்சாஸ் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 70.32 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 73.54 டாலராகவும் வர்த்தகமானது.

ABOUT THE AUTHOR

...view details