தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இந்த நிதியாண்டில் நுகர்வோர் துறை 2-4 % குறைய வாய்ப்பு - நுகர்வோர் துறை

மும்பை: COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகம் தடைபட்டுள்ளதால் நுகர்வோர் துறைக்கு வருவாய் வளர்ச்சி 2-4 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Consumer sector
Consumer sector

By

Published : May 27, 2020, 9:09 PM IST

கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது எனவும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நுகர்வோர் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பாதிப்பு நீண்ட நாட்கள் நீடிக்க கூடும் எனவும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே இந்த நிலைமையை சரிசெய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிதியாண்டில் நுகர்வோர் துரையின் வளர்ச்சி இரண்டு முதல் நான்கு விழுக்காடு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வருகிறது முதல் கேபிள் பாலம்!

ABOUT THE AUTHOR

...view details