ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து கிட்டத்தட்ட வெற்றியடையும் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து சர்வதேச பங்குச்சந்தைகள் பெரியளவில் ஏற்றம் கண்டு வர்த்தகமானது.
இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட்டாலும்கூட, விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல் காரணமாக தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வர சில மாதங்கள் வரை ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக டோக்கியோ தவிர பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்தன.
அதேபோல நியூயார்க் மாகாணத்தில் கரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டவுடனேயே அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிய தொடங்கியது.