தமிழ்நாடு

tamil nadu

'50% பேர் தொழில் வாய்ப்புகளுக்காக திறன்களை மேம்படுத்துகின்றனர்'

By

Published : May 28, 2020, 3:13 AM IST

மும்பை: ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தவர்களில் 50% பேர் தொழிலில் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தங்களைத் தயார் செய்து வருகின்றனர் என ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

job seekers
job seekers

கரோனா பரவல் காரணமாக வணிகம் முழுவதும் முடங்கிப்போனதால் பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்ததால், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது. மேலும் தற்போது உள்ள சூழலில் எந்த ஒரு நிறுவனமும் தங்களுக்கு வேலை வழங்காது என தெரியவந்த நிலையில், வேலை இழந்த பல பேர் புதிய வேலை தேடுவதை விட்டுட்டு தங்களது திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள், பயிற்சி வகுப்புகள் என தங்களைப் பிஸியாக வைத்துள்ளனர். மேலும் புதிய தொழில்முறைகளை கற்பதன் மூலம் வேறு நிறுவனங்களுக்கு செல்வதன் மூலம் விரைவில் வேலைகிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

அதனால், வேலை தேடுபவர்களில் 50 விழுக்காடு பேர், இது போன்ற ஆன்லைன் வகுப்புகள், பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டுள்ளனர் என ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: இந்த நிதியாண்டில் நுகர்வோர் துறை 2-4 % குறைய வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details